Kalasa Pooja Mantra in Tamil

[ad_1] Kalasa Pooja Mantra in Tamil கலச பூஜை முக்கியமானது. இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும். கலசம் வைக்கும் சுத்தமான செம்புப் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நான்கு பக்கங்களிலும் சந்தனக் கீற்று போட்டு குங்குமப் பொட்டு அழுத்தி வையுங்கள். மலர்ச்சரத்தை எடுத்து அதன் கழுத்தில் சுற்றுங்கள். முன்னதாக உயரமாகப் பீடம் அமைக்க வேண்டும். முதலில் உதிரிப் புஷ்பங்களில் அர்ச்சனை செய்து கொண்டே பூஜையை ஆரம்பியுங்கள். ஓங்கும் குருப்பியோம் நம- கங்கணபதியே நம-தூம்துர்க்காயை நம-க்ஷம ஷேந்திர பாலாய நம-ஆதாரசக்தியே நம- மூலப் பிரகிருதியே நம ஆதிகூர்மாயை நம-ஆனந்தாய நம- பிருத்வியை நம- ஸ்வேத க்ஷச்ராயை நம-ஐஸ்வர்யாயை நம-வைராக்கியாய நம- ஓம் நமோ பகவதேசகல சக்தி யுக்தாய அனந்தாய மகாயோக பீடாத்மனே நம. இந்த மந்திரங்களை ஜெபித்துக் கொண்டே கலசத்தின் மீது அட்சதை போடவேண்டும். கையால் கலசத்தின் வாயை மூடவேண்டும். இப்பொழுது கலசத்தை பீடத்தின் நடுநாடகமாக வைக்க வேண்டும். இனி கலசபூஜைக்குரிய மந்திரத்தைச் சொல்ல வேண்டும் அப்பொழுது உங்கள் எண்ணங்கள் யாவும் கலசத்தின் மீதே இருக்க வேண்டும். கலச மந்திரம் கலச ’ஸ்ய முகே விஷ்ணு:கண்டே ருத்ர: ஸமாச்’ரித:மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மாமத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா: குக்ஷௌ து ஸாகரா: ஸர்வேஸப்தத்வீபா வஸுந்தராருக்வேதோ (அ)த யஜுர்வேத:ஸாமவேதோ (அ) ப்யதர்வண: அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வேகலசா ’ம்பு ஸமாச்’ரிதா:ஆயாந்து தேவபூஜார்த்தம்துரிதக்ஷயகாரகா: கங்கே ச யமுனே சைவகோதாவரி ஸரஸ்வதிநர்மதே ஸிந்து காவேரிஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குருஓம் பூர்புவஸ்ஸுவ: மந்திரங்களைச் சொல்லி முடித்துவிட்டு கலசத்தினுள் இருக்கும் நீரில் சிறிதளவு எடுத்து பூஜைப் பொருட்களின் மீது தெளியுங்கள். பிறகு மாவிலைக் கொத்தை எடுத்து செப்புக்கலசத்தின் மீது வையுங்கள் . அதன்மீது குடுமி எடுக்காத தேங்காயை வையுங்கள். [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam href="https://telegram.me/tamil_astrology_nithyasubam">https://telegram.me/tamil_astrology_nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/kalasa-pooja-mantra-in-tamil/?feed_id=3875&_unique_id=677ec0a81dc6b

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கான சிறந்த வாஸ்து குறிப்புகள்

Vinayagar Kavasam Lyrics in Tamil