நாகர்கோயில் ஸ்பெஷல் புளிக்கறி செய்முறை | nagarkovil special pulikari preparation in tamil

[ad_1] - Advertisement - ஒவ்வொரு ஊருக்கும் ஏற்றார் போல் ஏதாவது ஒரு உணவு சிறப்பாக இருக்கும். அதிலும் ஒரு சில ஊர்களில் செய்யக்கூடிய உணவுப் பொருட்கள் மற்ற ஊர்களில் செய்யவே மாட்டார்கள். அதன் பெயர் கூட சற்று வித்தியாசமாகவே இருக்கும். அந்த பெயரை கூட கேள்விப்பட்டு இருக்க மாட்டார்கள். ஆனால் அதை செய்வதற்கு மிகவும் எளிமையாக இருப்பதோடு சுவையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த ஒரு உணவாக திகழ்வதுதான் நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற திகழும் புளிக்கறி. இந்த குழம்பை நாம் ஒருமுறை வீட்டில் செய்து விட்டோம் என்றால் சாப்பிடுபவர்களுக்கும் திரும்ப சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். செய்பவர்களுக்கும் அது எளிமையாக இருக்கும். சரி இப்பொழுது புளிக்கறியை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் தெரிந்து கொள்வோம். - Advertisement - தேவையான பொருட்கள் புளி – நெல்லிக்காய் அளவு,தேங்காய் நறுக்கியது – ஒரு கப்,சின்ன வெங்காயம் – 8,சீரகம் – 1/2 டீஸ்பூன்,காய்ந்த மிளகாய் – 4,மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,கத்திரிக்காய் – 2,உப்பு – தேவையான அளவு,தேங்காய் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்,கடுகு – 1/2 டீஸ்பூன்,வெந்தயம் – 1/2 டீஸ்பூன்,கருவேப்பிலை – ஒரு கொத்து. செய்முறை முதலில் புளியை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நறுக்கி வைத்திருக்கும் தேங்காய், தோல் உரித்த இரண்டு சின்ன வெங்காயம், சீரகம், காய்ந்த மிளகாய் மூன்று, மஞ்சள் தூள் இவற்றை போட்டு ஒரு முறை அரைத்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். - Advertisement - அடுத்ததாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஒரு கத்திரிக்காயை எட்டாக நறுக்கி இரண்டு கத்திரிக்காயை சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 1/4 ஸ்பூன் மட்டும் உப்பு போட்டு மூடி போட்டு கத்திரிக்காயை வேக விடுங்கள். கத்திரிக்காய் நன்றாக வெந்த பிறகு இதில் நாம் அரைத்து வைத்து இருக்கும் தேங்காய் விழுதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த குழம்பிற்கு தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே கத்தரிக்காய் வேகும்பொழுது உப்பு சேர்த்து இருக்கிறோம் என்பதால் பார்த்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த குழம்பு நன்றாக கொதிக்கக் கூடாது. லேசாக கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். இப்பொழுது தாளிப்பதற்காக ஒரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெந்தயம் இரண்டையும் போட வேண்டும். வெந்தயம் சிவந்து வாசனை வந்த பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் ஐந்து சின்ன வெங்காயங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு இதனுடன் ஒரு காய்ந்த மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து வெங்காயம் நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமான பிறகு நாம் அடுப்பில் இருந்து இறக்கி வைத்திருக்கும் குழம்பில் இந்த தாளித்த வெங்காயத்தை சேர்த்து நன்றாக ஒருமுறை கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான புளிக்கறி தயாராகிவிட்டது. இதையும் படிக்கலாமே:புதினா முள்ளங்கி தொக்கு செய்முறைஎப்பொழுதும் போல் சாம்பார், கார குழம்பு, ரசம் என்று வைப்பதற்கு பதிலாக இப்படி சற்று வித்தியாசமாக நாகர்கோவிலின் ஸ்பெஷல் ஆக திகழக்கூடிய புளிக்கறியை ஒருமுறை செய்து பாருங்கள். சுவை அபாரமாக இருக்கும். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam href="https://telegram.me/tamil_astrology_nithyasubam">https://telegram.me/tamil_astrology_nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b7%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf/?feed_id=3925&_unique_id=6782b256a2bcb

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருவேடகம் ஏடகநாதர் கோவில்: Thiruvedagam Temple in Tamil

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

Ashtavakra Gita in Tamil - அஷ்டாவக்ர கீதை