புதினா முள்ளங்கி தொக்கு செய்முறை | raddish thokku preparation in tamil

[ad_1] - Advertisement - நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் சத்து மிகுந்த உணவை உண்ண வேண்டும். அதிலும் குறிப்பாக மதிய நேரத்தில் சிறிய அளவில் அரிசி சாப்பாட்டை எடுத்துக்கொண்டு அதைவிட அதிகமான அளவு காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி காய்கறிகளை நாம் செய்யும் பொழுது அந்த காய்கறி நமக்கு அதிக அளவில் சத்துக்களை தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நீர்ச்சத்து அதிகம் இருக்கக்கூடிய முள்ளங்கியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் அதன் வாடை பிடிக்காமல் பலரும் அதை உண்ண மறுப்பார்கள். அந்த வாடையே வராமல் முள்ளங்கி தொக்கை ஒரு முறை செய்து பாருங்கள். சாப்பிட்டவர்கள் இது முள்ளங்கி தானா என்று கேட்பார்கள். அப்படிப்பட்ட முள்ளங்கி தொக்கை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் முள்ளங்கி – 1/2 கிலோ,நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,வெங்காயம் – 3,தக்காளி – 2,கடுகு – ஒரு ஸ்பூன்,பச்சை மிளகாய் – 4,பூண்டு – 20 பல்,புதினா – ஒரு கைப்பிடி அளவு,மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்,உப்பு – தேவையான அளவு,மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்,தனியாத்தூள் – ஒரு ஸ்பூன்,புளி – 50 கிராம்,கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு செய்முறை முதலில் முள்ளங்கியின் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அந்த கடாய் சூடானதும் அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணையை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் இவற்றை சேர்க்க வேண்டும். கடுகு வெடித்ததும் அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமான பிறகு தோல் உரித்த பூண்டு பற்களை அதில் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள். - Advertisement - பூண்டு லேசாக எண்ணெயில் வேக ஆரம்பித்ததும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் முள்ளங்கியையும் அதில் சேர்த்து ஒரு முறை நன்றாக பிரட்டி விடுங்கள். பிறகு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து மூடி போட்டு பத்து நிமிடம் வேகவைத்து விடுங்கள். 10 நிமிடம் கழித்து அதில் ஒரு கைப்பிடி அளவு புதினா, பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு இதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், தனியா தூள் இவற்றையும் சேர்த்து நன்றாக மசாலாவின் வாடை போகும் வரை வதக்க வேண்டும். மசாலாவின் வாடை போன பிறகு இதில் 50 கிராம் புளியை 100 எம்எல் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து அதை ஊற்ற வேண்டும். இதனுடன் மேற்கொண்டு முக்கால் டம்ளர் தண்ணீரையும் ஊற்றி மூடி போட்டு மறுபடியும் நன்றாக வேக விட வேண்டும். இதில் இருக்கக்கூடிய மசாலா அனைத்தும் கெட்டியாகி தொக்கு பதத்திற்கு வர வேண்டும். இதில் மேற்கொண்டு ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி ஒருமுறை கலந்து மூடி போட்டு வேக விடுங்கள். தொக்கு நன்றாக வற்றிய பிறகு எண்ணெய் மேலே பிரிந்து வர ஆரம்பிக்கும் அப்பொழுது ஒருமுறை நன்றாக கலந்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளையும் போட்டு அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும். சுவையான புதினா முள்ளங்கி தொக்கு தயாராகிவிட்டது. இதையும் படிக்கலாமே:சத்தான ராகி ஊத்தாப்பம் செய்முறைஇந்த முள்ளங்கி தொக்கை நாம் சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி, தயிர் சாதம், சாம்பார் சாதம் என்று அனைத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம். மிகவும் சுவையானது. இதில் இருக்கக்கூடிய அனைத்து பொருட்களுமே உடலுக்கு நன்மை தரக்கூடிய பொருட்கள் என்பதால் ஆரோக்கியமான உணவாகவும் இது திகழும். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam href="https://telegram.me/tamil_astrology_nithyasubam">https://telegram.me/tamil_astrology_nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/?feed_id=4026&_unique_id=678a9cbf52c12

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கான சிறந்த வாஸ்து குறிப்புகள்

Vinayagar Kavasam Lyrics in Tamil