இந்த வார ராசிபலன் 01/07/2024 முதல் 07/07/2024 வரை - 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டகரமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பிரிந்து சென்ற உறவுகள் விரும்பி வந்து சேருவார்கள். வாழ்க்கையில் பெரிய பிரச்சனை என்று நினைத்துக் கொண்டிருந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. உடன் பணிபுரிபவர்களின் உதவியால் வேலையை செம்மையாக செய்து முடிப்பீர்கள். விரும்பிய சலுகைகள் கிடைத்த வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியைத் தரும். உடன் இருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். - Advertisement - ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கலவையான பலன்களைத் தரும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த மருத்துவ செலவுகள் படிப்படியாக குறையும். பிறருடைய விஷயங்களில் கவனம் செலுத்தாமல் உங்களுடைய இலக்குகளை நோக்கி பயணம் செய்வது நன்மையை தரும். வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். இருப்பினும் வேலையை திறம்பட செய்து முடிப்பீர்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். ஒரு சிலருக்கு சொந்த இடத்திற்கு தொழிலை மாற்றுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதகமான வாரமாக திகழப் போகிறது. தேடி வரும் வாய்ப்புகளை விட்டு விடாமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பண வரவு ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கும். பிறரிடம் பேசும் பொழுது பொறுமையை கையாளுவதன் மூலம் மனஸ்தாபம் ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். வேலையில் கவனம் செலுத்துவதன் மூலம் வேலையை தக்க வைத்துக் கொள்ள முடியும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். தொழிலை பொருத்தவரை உழைப்பிற்கேற்ற லாபமே கிடைக்கும். புதிதாக எந்த முதலீட்டையும் விரிவாக்கத்தையும் இந்த வாரம் யோசிக்க வேண்டாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும். - Advertisement - கடகம் கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுறுசுறுப்புடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பழைய வாகனங்களை மாற்றும் யோகம் ஒரு சிலருக்கு உள்ளது. உணவு விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உறவுகளிடம் பேசும் பொழுது கவனத்துடன் பேசுவது நல்லது. தேவையற்ற வாக்குறுதிகளை வழங்காமல் இருக்க வேண்டும். வேலையை பொருத்தவரை வேலை சுமை குறைவாக இருந்தாலும் வேலையில் கவனம் செலுத்தாமல் இருந்தால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. யாரையும் நம்பி எந்த வேலையும் ஒப்படைக்காமல் கவனத்துடன் செய்தால் வேலையை தக்கவைத்துக் கொள்ள முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். உடன் இருப்பவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழ்நிலை உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும். சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். தேவையற்ற மனக்குழப்பத்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உடன் பிறந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் அவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் வராமல் தவிர்த்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருந்தாலும் அதை திறம்பட செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். அதனால் விரும்பிய சலுகைகளும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். பணி புரிபவர்கள் நல்ல முறையில் வேலை செய்து லாபத்தை அதிகரிப்பார்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும். கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நற்பலன்கள் நிறைந்த வாரமாக திகழப் போகிறது. மன மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பண வரவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கவலை வேண்டாம். வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். கூடுதல் கவனம் செலுத்தி செய்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிகமான அளவு லாபம் கிடைக்கும். அதற்காக சற்று கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்துவதற்குரிய முயற்சிகள் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அபிராமி அம்பிகையை வழிபட வேண்டும். துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதானத்துடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பண வரவு இருக்காது. இருப்பினும் குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட சற்று நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு விரும்பிய சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது என்றாலும் நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தொழிலில் இருந்து வந்த போட்டிகளை சமாளிப்பது சற்று கடினமாக இருக்கும். புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். பண வரவிற்கு ஏற்ற செலவுகளும் உண்டாகும். உற்றார் உறவினருடன் பக்குவமாக நடந்து கொள்வது நன்மையை தரும். தேவையற்ற பிரச்சனைகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. திருமண பேச்சுகள் சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்படும். வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். வேலையை வேறு யாரிடமும் ஒப்படைக்காமல் தாமே செய்வது நன்மையை தரும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. புதிய முதலீடுகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். தனுசு தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுறுசுறுப்பாக இருக்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதற்கு இணையான செலவுகளும் ஏற்படக்கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நல்ல செய்தி வந்து சேரும். பிறரிடம் பேசும் பொழுது கவனத்துடன் பேச வேண்டும். இல்லையேல் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். திருமணம் முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையை பொருத்தவரை புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்களின் திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்பு கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழும். வெற்றியும் உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகிழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும். மகரம் மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டகரமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்தால் அளவிற்கு பணவரவு ஏற்படாது என்றாலும் செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு வருமானம் வந்து கொண்டு இருக்கும். எதிலும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. யாரிடமும் எந்த வாக்குறுதியும் தரக்கூடாது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை திறப்பட செய்து முடித்து விரும்பிய சலுகைகளை பெறுவீர்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள். அந்த முயற்சிகள் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகிழ்வதற்கு வெங்கடாசலபதியை வழிபட வேண்டும். கும்பம் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடும். குடும்ப ரீதியாக எடுக்கக்கூடிய முடிவுகளை ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. ஒரு சிலருக்கு வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். வேலையை பொருத்தவரை புதிதாக எந்த வேலைக்கும் முயற்சி செய்யக் கூடாது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். உடன் பணிபுரிபவர்களிடமும் அதிகாரிகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் இருக்காது என்றாலும் ஓரளவிற்கு சமாளித்துக் கொள்ள முடியும். தொழிலில் மாற்றம் செய்வதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பாளை வழிபட வேண்டும். மீனம் மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதானத்துடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு சரியாகும். ஒரு சிலருக்கு வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த காரியம் வெற்றிகரமாக நடைபெறும். பழைய கடன்கள் தீருவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. வேலையை பொருத்தவரை புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர்ப்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது என்றாலும் நிதானத்துடனும் பொறுமையுடனும் செயல்படுவதன் மூலம் மேற்கொண்டு லாபம் பெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/?p=3870

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருவேடகம் ஏடகநாதர் கோவில்: Thiruvedagam Temple in Tamil

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

Ashtavakra Gita in Tamil - அஷ்டாவக்ர கீதை