இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2024

[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சோம்பேறித்தனம் நிறைந்த நாளாக இருக்கும். விடுமுறை நாளாக இருப்பதால் நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் இருக்கும். மற்ற வேலைகளில் கவனம் இருக்காது. வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு இரட்டிப்பு வேலை இருக்கும். கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும் வேலையோடு சேர்த்து ஏற்படும். ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள். நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தோடு இன்று மாலை கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலை செய்யும் இடத்திலிருந்து சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். சில பேருக்கு இடம் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலில் பெரிய அளவில் பிரச்சனை இருக்காது. முதலீட்டில் மட்டும் கவனம் செலுத்தவும். - Advertisement - மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்தித்து நேரத்தை செலவு செய்வீர்கள். வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையில் சின்ன சின்ன இடர்பாடுகள் வரலாம். விடுமுறை நாளாகவே இருந்தாலும் இன்றைக்கு வேலை செய்ய வேண்டிய கட்டாயம் சில பேருக்கு இருக்கும். அதனால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். வேறு வழி கிடையாது. கொடுத்த பொருப்பை சரியான நேரத்தில் முடித்து தானே ஆக வேண்டும். கடகம் கடக ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். காலையிலேயே இன்றைய நாளைக்கான வேலையை சரியாக பிளான் செஞ்சுருவீங்க. மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். இந்த நாள் இறுதியில் அவ்வளவு மனதிருப்தி இருக்கும். நல்ல தூக்கம் கிடைக்கும். வருமானம் சீராகும். சேமிப்பு உயரும். இறைவனின் அருள் கிடைக்கும். - Advertisement - சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உழைப்புதான் முதலீடு. யார் பேச்சையும் கேட்டு எந்த முடிவையும் எடுக்காதீங்க. கடினமாக உழைத்தாலே உங்களுக்கு உண்டான வெற்றி கிடைத்து விடும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலில் வரக்கூடிய தடை கற்களை எல்லாம் படி கற்களாக மாற்றி விடலாம். நீங்களே உங்களுக்கு உண்டான கட்டுப்பாடுகளை விதித்து கொள்ளவும். கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் வரும். சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். கடவுள் உங்களுக்கு சோதனைகளை கொடுப்பான். ஆனால் அதை எல்லாம் கடந்து செல்லக்கூடிய தைரியத்தையும் உங்களுக்கு கொடுத்திருப்பான். பிரச்சனைகள் வந்து அது சரியாகி நிம்மதி அடையக்கூடிய நாள் இன்று. குலதெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள். உங்கள் ஊர் மாரியம்மன் கோவிலுக்கு போய் விளக்கு போடுங்க. - Advertisement - துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். எல்லா வேலையையும் குறித்த நேரத்திற்குள் முடித்துக் கொடுத்து விடுவீர்கள். நீண்ட தூர பயணம் நன்மையை தரும். வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அம்மனின் அருளால் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளவும். வீட்டில் சுப காரிய தடை விலக வழிவகுக்கும். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். எந்த வேலையிலும் மனது ஈடுபடாது. ஆனால் தன்னம்பிக்கை தைரியத்தை மட்டும் கைவிடாமல் உங்களுடைய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உழைப்புக்கு உண்டான ஊதியத்தை அந்த கடவுள் உங்களுக்கு கொடுத்து விடுவான். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் எல்லாம் சரியாகிவிடும். தனுசு தனுசு ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் மன வருத்தத்தோடு இருப்பீர்கள். மனதிற்கு பிடித்தவர்களோடு சண்டைகள் வரும். குடும்பத்தில் இருக்கும் சந்தோஷத்தில் கொஞ்சம் குறையும். எல்லா விஷயங்களையும் அனுபவ படங்களாக எடுத்துக் கொள்ளுங்கள். உடைந்து போகாதீர்கள். முடிந்தால் இன்று குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும். புதிய முயற்சிகள் எடுப்பதை நாளை தள்ளி போடவும். மகரம் மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனமான நாளாக இருக்கும். கையில் எடுத்த வேலையை முழுசாக செய்து முடிக்க முடியாது. தொழிலிலும் சின்ன சின்ன பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வீர்கள். எதிரிகளால் தொல்லை வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையை இன்று செய்ய வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். கும்பம் கும்பராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வீட்டிலும் சரி வேலை செய்யும் இடத்திலும் சரி, உங்களை போல நல்லவர் யாருமில்லை என்று சொல்லுவார்கள். அந்த அளவுக்கு பெயர் புகழ் அந்தஸ்து உயரும். தொழிலில் முதலீடு செய்யலாம். தொழிலை விரிவுபடுத்தலாம். எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கும். நீண்ட தூர பயணம் கொஞ்சம் அலைசல் கொடுக்கும். உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். மீனம் மீன ராசிக்காரர்கள் இன்று அயராது உழைப்பீர்கள். வீட்டிற்கு தேவையான வேலைகளை செய்வீர்கள். மனது மகிழ்ச்சியாக தான் இருக்கும். வேலை செய்யும் இடத்திலும் மனதிருப்தி இருக்கும். தொழிலில் சின்ன சின்ன சங்கடங்கள் வரலாம். முதலீட்டில் கவனம் தேவை. அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. நிதிநிலைமை சொல்லும் படி இருக்காது. கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கும். செலவுகளை குறைப்பது நல்லது. - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/jodhidam-prediction/indraya-rasi-palan/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-28-%e0%ae%9c%e0%af%82%e0%ae%b2%e0%af%88-2024/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024-05-28 08:02:04 निफ्टी भविष्यवाणी: निफ्टी सीमा के भीतर रह सकता है | गिरावट पर खरीदें और ऊपरी स्तर पर बेचें

சகல செல்வங்களையும் பெற மந்திரம் | Sagala sevamum pera manthiram

இன்றைய ராசிபலன் – 06 மே 2024