ஆரோக்கியமான கருப்பு லட்டு செய்முறை | Black laddu recipe in tamil

[ad_1] - Advertisement - அன்றைய காலத்தில் நம்முடைய சமையலறையே மருத்துவ அறையாகவும் திகழ்ந்தது. காரணம் நம் உடலில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்வதற்குரிய பொருட்கள் சமையல் அறையில் தான் இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் சமையல் அறையை விட மிகவும் அதிகமான அளவு மருந்து மாத்திரைகளை உணவாக எடுத்துக் கொண்டு வருகிறோம். இதனால் நமக்கு நோய்கள் நீங்குமா என்று கேட்டால் கண்டிப்பான முறையில் நீங்காது என்று தான் கூற வேண்டும். ஆனாலும் நோயை கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளலாம். மேலும் இந்த மருந்துகளை நாம் உட்கொள்வதால் நமக்கு பக்கவிளைவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. இவை அனைத்தையும் நீக்குவதற்கு வருமுன் காப்போம் என்ற விதிப்படி ஆரோக்கியமான உணவுகளை நாம் சாப்பிட வேண்டும். அப்படி ஆரோக்கியமான உணவுப் பொருட்களை நாம் சாப்பிட செய்து கொடுத்தாலும் அதை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் அளவிற்கு செய்து கொடுக்கக் கூடிய ஒரு லட்டுவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். இந்த லட்டுவை தினமும் ஒன்று என்ற வீதம் எடுத்துக்கொண்டு வந்தால் எலும்புகள் வலுவடையும். சருமம் பளபளப்பாகும். முடி தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். இதயம் ஆரோக்கியமாக செயல்படும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த லட்டுவை சாப்பிட்டால் விரைவிலேயே உடல் எடை குறைய ஆரம்பிக்கும். இவ்வளவு அற்புத பலன்களை கொண்ட இந்த லட்டுவை நாம் வீட்டில் எப்படி தயார் செய்வது என்பதை பார்ப்போம். - Advertisement - தேவையான பொருட்கள் கருப்பு எள் – ஒரு கப் ஆளி விதை – ஒரு கப் பூசணி விதை – 1/4 கப் கசகசா – 1/4 கப் வெள்ளம் – 1 1/2 கப் ஏலக்காய் தூள் – ஒரு ஸ்பூன் நெய் – 3 டேபிள் ஸ்பூன் செய்முறை முதலில் ஒரு இரும்பு கடாயை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு இரும்பு கடாயை பயன்படுத்துவது என்பது மிகவும் சிறப்பு. அப்படி இல்லாத பட்சத்தில் சாதாரண கடாயை கூட எடுத்துக் கொள்ளலாம். அடுத்ததாக கருப்பு எள்ளை எடுத்து தண்ணீர் ஊற்றி சுத்தமாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் கடாயை வைத்து வடிகட்டி வைத்திருக்கும் கருப்பு எள்ளை அந்த கடாயில் சேர்த்து எள் பொரியும் வரை குறைந்த தீயில் வைத்து நன்றாக வறுக்க வேண்டும். எள் பொரிய ஆரம்பித்ததும் அதை ஒரு அகலமான தட்டில் கொட்டி ஆரவைத்துக் கொள்ளுங்கள். மறுபடியும் இதே கடாயை அடுப்பில் வைத்து ஆளி விதையை போட்டு நன்றாக அது பொரியும் அளவு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதையும் எள்ளுடன் சேர்த்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். - Advertisement - மூன்றாவதாக பூசணி விதையையும் அடுப்பில் சேர்த்து அது நன்றாக சிவந்து வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். அந்த பூசணி விதையையும் ஆளி விதையுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கடைசியாக கசகசாவை அடுப்பில் போட்டு குறைந்த தீயில் வைத்து நன்றாக சிவக்கும் வரை வறுத்தெடுக்க வேண்டும். நன்றாக சிவந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதையும் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இவை அனைத்தும் நன்றாக ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் ஆற வைத்திருக்கும் அனைத்து பொருட்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இது ஒன்றிரண்டாக அரைபட்டவுடன் இதனுடன் பொடித்து வைத்திருக்கும் வெள்ளத்தையும் சேர்த்து ஒரு முறை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். - Advertisement - இதை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டுவிட்டு இதனுடன் ஏலக்காய் தூள் மற்றும் உருக்கிய நெய் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இதை உருண்டையாக பிடித்து எடுத்து வைத்து விட வேண்டும். அவ்வளவுதான் ஆரோக்கியமான கருப்பு லட்டு தயாராகிவிட்டது. இதையும் படிக்கலாமே கற்கண்டு சாதம் செய்முறை மிகவும் எளிமையான பொருட்களாக இருந்தாலும் இந்த பொருட்கள் அனைத்தும் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதால் இந்த கருப்பு லட்டுவை வீட்டின் தயார் செய்து பார்க்கலாம். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024-05-28 08:02:04 निफ्टी भविष्यवाणी: निफ्टी सीमा के भीतर रह सकता है | गिरावट पर खरीदें और ऊपरी स्तर पर बेचें

சகல செல்வங்களையும் பெற மந்திரம் | Sagala sevamum pera manthiram

இன்றைய ராசிபலன் – 06 மே 2024