செல்வநிலை உயர மஹாலக்ஷ்மி மந்திரம் | selvanilai ooyara mahalakshmi manthiram in tamil

[ad_1] - Advertisement - இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு பணவரவு என்பது அதிகரிக்கும். எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் அந்த உழைப்பிற்கேற்ற பலன் கிடைத்தால் தானே அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றகரமாக அமையும். அப்படி உழைப்புக்கேற்ற பலனை பெற வேண்டும் என்றால் மகாலட்சுமியின் அருள் கண்டிப்பாக வேண்டும். இந்த மந்திரம் குறித்த பதிவில் அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்குரிய ஒரு மந்திரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம். மஹாலக்ஷ்மி மந்திரம் மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கு பல வழிகள் இருக்கின்றன, பல பரிகாரங்கள் இருக்கின்றன, பல மந்திரங்கள் இருக்கின்றன, பல வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. எப்பேர்பட்ட வழிபாடாக இருந்தாலும், பரிகாரமாக இருந்தாலும் அது முழுமையான பலனை பெற வேண்டும் என்றால் முழு மனதுடன் நாம் வழிபாடு செய்ய வேண்டும். - Advertisement - சரி மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்தால் செல்வநிலை உயர்ந்து விடுமா என்ற கேள்வி எழும். நாம் கடினமாக உழைத்து அந்த உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லை என்னும் பட்சத்தில் மகாலட்சுமி தாயாரை நாம் வழிபாடு செய்தோம் என்றால் அந்த உழைப்பைக்கேற்ற பலன் நமக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக பண வரவிற்கான முயற்சிகளை நாம் செய்தும் அந்த பணவரவு வரவில்லை என்றால் மகாலட்சுமி தாயாரை வழிபடும் பொழுது அந்த பணவரவு என்பது ஏற்படும். இப்படி நம்முடைய முயற்சிக்கு ஏற்றவாறு பலன்களை மகாலட்சுமி தாயார் தருவார். நம்முடைய கிரக சூழ்நிலை எப்படி இருந்தாலும் நாம் தொடர்ச்சியாக மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும் பொழுது மகாலட்சுமி தாயாரின் அருளால் கிரக நிலை மாறி நம்முடைய வாழ்க்கையில் செல்வநிலை உயர்வதற்குரிய வாய்ப்புகள் நம்மை தேடி வரும். நல்ல வேலை கிடைக்கவில்லை என்று இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்காமல் சம்பள உயர்வு கிடைக்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு சம்பள உயர்வு பதவி உயர்வும் கிடைக்கும். - Advertisement - தொழில் செய்பவர்களுக்கு சரிவர தொழில் நடக்கவில்லை என்னும் பட்சத்தில் நல்ல தொழில் வாய்ப்பு ஏற்படும். தொழில் நஷ்டத்தில் சென்று கொண்டிருப்பவர்களுக்கு நல்ல லாபம் ஏற்படும். இப்படி யார் ஒருவர் எந்த முயற்சியை விடாமல் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார்களோ அந்த முயற்சி மகாலட்சுமியின் அருளால் வெற்றியடையும். அதன் மூலம் பணவரவு ஏற்படும். அந்த பணவரவால் செல்வநிலை உயரும். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாருக்கு பல மந்திரங்கள் இருந்தாலும் சில மந்திரங்கள் மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட மந்திரங்களில் ஒன்றான - Advertisement - “ஓம் அம்ருத வாசினி வித்மஹேபத்ம லோசனி தீமஹிதந்தோ லக்ஷ்மி ப்ரசோதயாத்” என்னும் மந்திரத்தை மாலையில் நாம் வீட்டில் விளக்கேற்றி வைத்துவிட்டு மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வடக்கு பார்த்தவாறு அமர்ந்து ஒரே ஒரு முறை கூறினாலே மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதையும் படிக்கலாமே:பண அதிர்ஷ்டத்தை தரும் குபேரர் மந்திரம் மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை முழு மனதுடன் மகாலட்சுமி தாயாரை நினைத்து கூறுபவர்களுக்கு வறுமை நிலை மாறும். பணவரவு அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம் - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%be%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%b7%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருவேடகம் ஏடகநாதர் கோவில்: Thiruvedagam Temple in Tamil

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

Ashtavakra Gita in Tamil - அஷ்டாவக்ர கீதை