ஸ்ரீலங்கா ஸ்பெஷல் தொதல் செய்முறை | Srilanka speical thothal recipe in tamil

[ad_1] - Advertisement - ஒவ்வொரு நாட்டிலும் மிகவும் பிரபலமாக திகழக்கூடிய சில உணவுப் பொருட்கள் இருக்கும். அந்த உணவுப் பொருட்களை அடையாளப்படுத்துவதற்காகவே அந்த நாட்டை நாம் சேர்த்து அடையாளப்படுத்துவோம். அப்படி ஸ்ரீலங்காவில் மிகவும் பிரபலமாக திகழக்கூடியது தான் தோதல். இந்த இனிப்பானது தேங்காய் பாலை வைத்து செய்யக்கூடியதாக திகழ்கிறது. இதை கருப்பு அல்வா என்றும் கூறலாம். இருப்பினும் இது அல்வாவா கேக்கா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு சுவையும் அபாரமாக இருக்கும். சட்டு என்று 20 நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய இந்த அற்புதமான ஸ்ரீலங்காவில் பிரபலமாக திகழக்கூடிய தொதலை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் தேங்காய் – ஒன்று வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை – 2 கப் அரிசி மாவு – ஒரு கப் நெய் – ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன் வறுத்த முந்திரி – விருப்பத்திற்கு ஏற்ற செய்முறை முதலில் தேங்காயை பொடியாக நறுக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு முறை தேங்காய் பால் எடுத்துக் கொள்ளுங்கள். முதல் தேங்காய் பால் இரண்டு கப் இருக்க வேண்டும். அதேபோல் இரண்டாவது முறை எடுக்கும் தேங்காய் பாலும் இரண்டு கப் இருக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டாவதாக எடுத்த தேங்காய் பால் இரண்டு கப்பை ஊற்ற வேண்டும். அதில் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லத்தை சேர்க்க வேண்டும். தேங்காய் பாலில் நாட்டு சர்க்கரை நன்றாக கரைந்ததும் அதை ஒருமுறை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக வடிகட்டி எடுத்த இந்த பாலை அடிகனமான கடாயில் சேர்த்து அதனுடன் அரிசி மாவையும் சேர்த்து நன்றாக கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள். - Advertisement - இப்பொழுது இதை எடுத்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிண்ட வேண்டும். இது கெட்டியாகும் பதம் வந்தவுடன் அடுப்பை குறைத்துவிட்டு முதன்முறை எடுத்த தேங்காய் பாலை ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். இது கெட்டியான பிறகு இதில் ஒரே ஒரு ஸ்பூன் அளவிற்கு மட்டும் நெய்யை ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். பத்து நிமிடம் இது நன்றாக வெந்ததும், இதில் ஏலக்காய் தூள் வறுத்த முந்திரி இரண்டையும் சேர்த்து மறுபடியும் கிண்ட வேண்டும். பத்து நிமிடம் கழித்து இதில் இருந்து தேங்காய் எண்ணெய் ஆனது வெளியேறும். இந்த அல்வாவை கையில் எடுத்து உருட்டிப் பார்த்தால் உருட்ட வர வேண்டும். அப்படி வந்துவிட்டது என்றால் அடுப்பை அணைத்துவிட்டு நமக்கு விருப்பமான வடிவத்தில் இருக்கக்கூடிய பாத்திரத்தை எடுத்து அதில் அலங்காரத்திற்காக முந்திரி பருப்பு, பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை வைத்து அதற்கு மேல் நாம் செய்த இந்த அல்வாவை அப்படியே சேர்த்து சரிசமமாக பரப்பிக் கொள்ள வேண்டும். - Advertisement - இந்த அல்வாவை செய்த உடனே சாப்பிட்டால் சுவை இருக்காது. ஒரு நாள் கழித்து சாப்பிட்டால் தான் சுவை இருக்கும். இந்த அல்வாவை ஒரு வாரம் வரை வெளியில் வைத்திருந்து கூட நாம் சாப்பிடலாம். இப்பொழுது இந்த அல்வா நன்றாக ஆற விட்டு விடுங்கள். இது நன்றாக ஆரியப்பிறகு இந்த பாத்திரத்தை எடுத்து தலைகீழாக தட்டி எடுத்தால் நாம் விரும்பிய வடிவத்தில் அல்வா தயாராக இருக்கும். இதையும் படிக்கலாமே கும்பகோணம் கடப்பா செய்முறை வீட்டில் இருக்கக் கூடிய எளிமையான பொருட்களை வைத்து கருப்பு அல்வா அதுவும் சத்து மிகுந்த அல்வாவை தயார் செய்வதை பார்த்தோம். விருப்பம் இருப்பவர்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b7%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024-05-28 08:02:04 निफ्टी भविष्यवाणी: निफ्टी सीमा के भीतर रह सकता है | गिरावट पर खरीदें और ऊपरी स्तर पर बेचें

சகல செல்வங்களையும் பெற மந்திரம் | Sagala sevamum pera manthiram

இன்றைய ராசிபலன் – 06 மே 2024