கேரளா ஸ்டைலில் நெய் பாயாசத்தை சுவையா இப்படி செஞ்சு குடுங்க.

[ad_1] - Advertisement - பெரும்பாலும் வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் இனிப்பு வகைகளை கட்டாயமாக செய்வோம். அப்படி செய்யும் இனிப்பில் முக்கியமான இடத்தை பெறுவது எப்போதுமே பாயாசம் தான். நாம் எப்போதும் அரிசி பாயாசம், சேமியா, பால் பாயாசம் என வகை வகையாக செய்வோம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இந்த கேரளா ஸ்பெஷல் நெய் பாயாசத்தையும் இனி வீட்டில் விசேஷ நாட்களில் செஞ்சு அசத்தலாம் என்பதை பற்றி இந்த சமையல் குறித்த குறிப்பில் பார்க்கலாம். கேரளா ஸ்பெஷல் நெய் பாயாசம் செய்முறை இந்த பாயாசம் செய்ய சிகப்பரிசியை தான் பயன்படுத்த வேண்டும். அதில் செய்யும் போது தான் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் சிகப்பு அரிசி ஒரு கப் அளவு எடுத்து இரண்டு முறை தண்ணீர் ஊற்றி நன்றாக அலசிய பிறகு தான் இதை. சமைக்க பயன்படுத்த வேண்டும் - Advertisement - இப்போது குக்கரில் ஒரு கப் சிகப்பு அரிசிக்கு மூன்று கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். விசில் முழுவதுமாக இறங்கும் வரை இந்த அரிசி குக்கரில் இருக்கட்டும் அப்போது தான் சரியான பதத்தில் வெந்து வரும். இந்த அரிசி வேகம் பதம் ஆனது கையில் எடுத்து அழுத்தினால் கொஞ்சம் கடிபடும் அளவுக்கு இருக்க வேண்டும். அதிகமாக குழைந்து வெந்து விடவும் கூடாது. அடுத்து ஒரு கப் அரிசிக்கு 3 கப் வெல்லம் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி வெல்லத்தை கரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம் வெல்லத்தில் இருக்கும் தூசு மண் எல்லாம் அடியில் தங்கி விடும். வெல்லம் நாமக்கு சுத்தமாக கிடைக்கும் ஒரு வேளை நீங்கள் பயன்படுத்தும் வெல்லத்தில் தூசி மண் ஏதும் இருக்காது என்றால் நேரடியாக நுணுக்கி சேர்த்துக் கொள்ளலாம். - Advertisement - வெல்லம் நன்றாக கரைந்த பிறகு நாம் ஏற்கனவே வேக வைத்த அரிசியில் இந்த வெல்லக் கரைசல் தண்ணீரை ஊற்றி அடுப்பை மீண்டும் பற்ற வைத்து கொதிக்க வைக்க வேண்டும். இத்துடன் கால் டீஸ்பூன் ஏலக்காய் பொடி, ரெண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கொதிக்க விடுங்கள். இந்த தண்ணீர் நன்றாக வற்றி அரிசியுடன் பாகு போல கலக்கும் வரை தண்ணீர் கொதிக்க வேண்டும். அடுத்து ஒரு கப் அளவு தேங்காய் சின்ன சின்ன செல்லாக நறுக்கி கொள்ளுங்கள். அடுப்பில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு நறுக்கி வைத்த தேங்காயை அதில் போட்டு நிறம் மாறும் வரை சிவக்க வறுத்து அதை நாம் தயார் செய்து வைத்திருக்கும் பாயாசத்தில் கொட்டி கிளற வேண்டும். அவ்வளவு தான் நெய் பாயாசம் சுவையாக தயாராகி விட்டது இதையும் படிக்கலாமே: Banana Snacks : வாழைப்பழம் பன்னீர் வைச்சு சுவையான இந்த ஸ்நாக்ஸை இன்னைக்கே செய்ங்கஇந்தப் பாயாசம் செய்வது மிக மிக எளிமை. அதே நேரத்தில் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. ஏனெனில் இதில் சர்க்கரை எதுவும் நாம் சேர்க்கவில்லை அதே போல் சிகப்பு அரிசியும் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. இனி விசேஷம் போன்ற நாட்களில் இந்த பாயாசத்தை ட்ரை பண்ணி பாருங்க. - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%ae%b3%e0%ae%be-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%be/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024-05-28 08:02:04 निफ्टी भविष्यवाणी: निफ्टी सीमा के भीतर रह सकता है | गिरावट पर खरीदें और ऊपरी स्तर पर बेचें

சகல செல்வங்களையும் பெற மந்திரம் | Sagala sevamum pera manthiram

இன்றைய ராசிபலன் – 06 மே 2024