பாசிப்பருப்பு பூரி குஜராத்தி கடி செய்முறை

[ad_1] - Advertisement - குழந்தைகளும் சரி பெரியவர்களும் சரி எப்பொழுதும் போல் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு வித்தியாசமான முறையில் வித்தியாசமான சுவையில் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் அப்படி செய்து தரக்கூடிய பொருட்கள் ஆரோக்கியமான பொருட்களாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்கக்கூடிய இல்லத்தரசிகள் ஆசைப்படுவார்கள். இதோடு மட்டுமல்லாமல் தங்களின் சமையலை பாராட்ட வேண்டும் என்பதற்காகவே பார்த்து பார்த்து செய்யும் இல்லத்தரசிகளும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த முறையில் பூரி செய்து கொடுத்துப் பாருங்கள். ஆஹா ஓஹோ என்று உங்களை புகழ ஆரம்பித்து விடுவார்கள். அதுவும் குஜராத்தில் செய்யக்கூடிய ஒரு எளிமையான குழம்பை பூரிக்கு தொட்டுக்கொள்ள கொடுப்பதன் மூலம் இது என்ன புதிதாக இருக்கிறது என்று கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். ஒருமுறை செய்து பாருங்கள். மறுபடியும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கே வந்துவிடும். அப்படிப்பட்ட ஒரு பாசிப்பருப்பு பூரி மற்றும் குஜராத்தி கடி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் பாசிப்பருப்பு ஊறவைத்தது – ஒரு கப் பச்சை மிளகாய் – 5 பூண்டு – 10 பல் சீரகம் – 2 டீஸ்பூன் மிளகு – ஒரு டீஸ்பூன் ரவை – 3 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி – சிறிதளவு கோதுமை மாவு – தேவையான அளவு இஞ்சி – 2 இன்ச் கடலை மாவு – 100 கிராம் தயிர் – 50 கிராம் வெல்லம் – 2 டீஸ்பூன் நெய் – 2 ஸ்பூன் பெருங்காயம் – ஒரு ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 கடுகு – ஒரு ஸ்பூன் வெந்தயம் – 1/4 ஸ்பூன் கருவேப்பிலை – சிறிதளவு செய்முறை முதலில் பாசிப்பருப்பை மூன்று மணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ஊற வைத்த பாசிப்பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் மூன்று பச்சை மிளகாய், 10 பல் பூண்டு, சீரகம் ஒரு ஸ்பூன், மிளகு ஒரு ஸ்பூன் சேர்த்து முக்கால் கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த பேஸ்ட்டை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது இதனுடன் ரவை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி தலை இவை அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு இதை பூரி மாவு பதத்திற்கு பிணைவதற்கு தேவையான அளவு கோதுமை மாவை சேர்த்து பிணைய வேண்டும். பாசிப்பருப்பு அரைத்ததில் இருக்கக்கூடிய தண்ணீரை மட்டுமே உபயோகப்படுத்தி பூரிக்கு மாவு பிணைய வேண்டும். மேற்கொண்டு தண்ணீர் ஊற்ற வேண்டாம். - Advertisement - இப்படி பிணைந்த மாவை 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதற்குள் இதற்கு தொட்டுக்கொள்ள குஜராத்தி கடியை செய்ய ஆரம்பிப்போம். இதற்கு ஒரு இடிகல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு பச்சை மிளகாய், 2 இஞ்சி சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, இடித்த பச்சை மிளகாய் இஞ்சி, தயிர், சிறிதளவு கொத்தமல்லி, இதற்கு தேவையான அளவு உப்பு, பொடி செய்து வைத்திருக்கும் வெல்லம், 500 எம்எல் தண்ணீர் ஊற்றிய நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றி, நெய் உருகியதும் நாம் கலந்து வைத்திருக்கும் இந்த கடலை மாவை அப்படியே எடுத்து ஊற்றி விட வேண்டும். இது தண்ணியாக இருந்தால் தான் நன்றாக இருக்கும். கொதிக்க கொதிக்க கடலை மாவு திக்காக மாறும் என்பதால் தேவைப்படும் பொழுதெல்லாம் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். மூன்றில் இருந்து நான்கு நிமிடம் குறைந்த தீயில் வைத்து இதை கொதிக்க விட வேண்டும். - Advertisement - கடைசியாக இறக்கும் பொழுது பெருங்காயத்தூளை தூவி இறக்கி விடுங்கள். இப்பொழுது இதற்கு தாளிப்பதற்கு ஒரு தாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம் வெந்தயம், கருவேப்பிலை அனைத்தையும் சேர்த்து இதை அனைத்தும் பொறிந்ததும் இறக்கி வைத்திருக்கும் கடலை மாவில் ஊற்றி விட வேண்டும். அவ்வளவுதான் குஜராத்தி கடி தயாராகிவிட்டது. இப்பொழுது நாம் பிணைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ற அளவில் பூரியாக தேய்த்து கொள்ள வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து பூரி பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு பூரியாக அதில் சேர்த்து பூரியை சுட்டு எடுத்து விட வேண்டும். இதையும் படிக்கலாமே:கல்யாண வீட்டு கேசரி செய்முறை இந்த பூரியில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த குழம்பை ஊற்றி ஊற வைத்து சாப்பிடும் பொழுது, மிகவும் சுவையாக இருக்கும். இனிமேல் பூரி செய்வதாக இருந்தால் இப்படி தான் செய்ய வேண்டும் என்று வீட்டில் இருக்கும் அனைவரும் கூறுமளவிற்கு சுவையில் பிரமாதமாக இருக்கும். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%be/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024-05-28 08:02:04 निफ्टी भविष्यवाणी: निफ्टी सीमा के भीतर रह सकता है | गिरावट पर खरीदें और ऊपरी स्तर पर बेचें

சகல செல்வங்களையும் பெற மந்திரம் | Sagala sevamum pera manthiram

இன்றைய ராசிபலன் – 06 மே 2024