வீட்டிலேயே சுத்தமான பெருங்காய பொடி தயாரிப்பு முறை
[ad_1]
- Advertisement -
பொதுவாக நம்மில் பலர் பெருங்காயத் தூளை அடிக்கடி இப்போதெல்லாம் உணவில் சேர்க்கிறோமா? என்பது தெரியாது. வாய்வு நீக்கும் இந்த பெருங்காயத்தூள் வாய்வை உண்டாக்கக் கூடிய உணவுப் பொருட்களில் அந்த காலம் முதல் இந்த காலம் வரை சேர்ப்பது பாரம்பரிய பழக்க வழக்க முறையாகும். இந்த பெருங்காயத் தூள் கடைகளில் வாங்கினால், பெரும்பாலும் கலப்படம் நிறைந்ததாக தான் இருக்கும். கலப்படம் இல்லாமல் வீட்டிலேயே எப்படி சுத்தமான பெருங்காய பொடியை தயார் செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
கடைகளில் விதவிதமான பிராண்டுகளில் டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் பெருங்காயத்தூள் பெரும்பாலும் மைதா அல்லது கோதுமை சேர்த்து செய்வது வழக்கம். நீங்கள் வாங்கும் பாக்கெட்டுகளில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது? என்னும் விவரமும் அடங்கியிருக்கும். ஆனால் பெரும்பாலும் அதை யாரும் கவனிப்பது கிடையாது.
- Advertisement -
குழம்புத்தூள் அரைப்பதற்கு பெருங்காய கட்டியை தான் பயன்படுத்துவோம் அல்லவா? அதே போல ஒரு முறையைத் தான் தூள் செய்வதற்கும் செய்யப் போகிறோம். சுத்தமான பெருங்காய கட்டியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தவாவில் போட்டு சூடேற்றினால் இளக ஆரம்பிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்து இளக விடுங்கள்.
ஒவ்வொரு முறையும் திருப்பி போட்டுக் கொண்டே இருங்கள். கட்டி இளக இளக, அதன் மீது அழுத்தம் கொடுத்து பெரிதாக்குங்கள். ஓரளவுக்கு பெரிதாகிய பின்னர், ஏதாவது ஒரு கனமான பொருளை வைத்து மேற்புறத்தில் அழுத்தம் கொடுங்கள். டம்ளரின் பின்புறம் வைத்து அழுத்தினால் சரியாக வரும். நடுப்பகுதியை அழுத்தியவுடன் உப்பி வரும். லேசாக பூரி போல் உப்பி வந்ததும் மேற்புற பகுதியில் ஓட்டை போட்டுக் கொள்ளுங்கள்.
- Advertisement -
காற்று போனதும் எல்லாப்புறமும் ஒன்று போல நன்கு வெந்து மொறு மொறு என்று வரும். ஈரப்பதம் நீங்கி நன்கு மொறு மொறுவென்று வந்ததும், அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த கட்டியை ஆறியதும் பொடி பொடியாக இடித்து வைத்துக் கொள்ளுங்கள். பின் இடித்து வைத்துள்ள பொடியை ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்து எடுத்து இந்த பவுடரை ஒரு டப்பாவில் ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். காற்று புகாத டப்பாவில் அடைப்பது நல்லது. இந்த பெருங்காயத் தூளை நீங்கள் தொடர்ந்து சமையலுக்கு பயன்படுத்துங்கள். பெருங்காயத்தூள் சமையலில் அதிகம் சேர்த்து விடக் கூடாது. சிட்டிகை அளவுக்கு பெருங்காயத்தூள் என்று தான் சொல்லுவார்கள்.
இதையும் படிக்கலாமே:சோயா கீமா பிரியாணி டிபன் பாக்ஸ் ரெசிபி
வாய்வுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி பெருங்காயத்தூள் சேர்த்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும். வாய்வு தொந்தரவுகளால் வயிற்று வலி ஏற்படும் பொழுது, ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து உடன் சிட்டிகை தூள் உப்பு போட்டு மிதமான சூட்டில் அப்படியே குடித்து விட உடனடி நிவாரணம் கிடைக்கும். பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு போன்ற வாய்வு தரும் அனைத்து விதமான உணவு பொருட்களில் பெருங்காயத்தூள் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு பலன் தரும். அதை சுத்தமான முறையில் தயாரித்து வீட்டிலேயே வைத்துக் கொள்வது சால சிறந்தது, இனி கடைகளில் வாங்காதீர்கள்.
- Advertisement -
[ad_2]
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87%e0%ae%af%e0%af%87-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81/
கருத்துகள்
கருத்துரையிடுக