10 மினிட்ஸ் தீபாவளி ஸ்வீட் ரெசிபி

[ad_1] - Advertisement - ஒவ்வொரு தீபாவளிக்கும், ஒவ்வொரு விதமான புது இனிப்பு வகைகளை செய்து கொடுத்தால் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் மகிழ்ச்சி கொள்வார்கள். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு என்னடா ஸ்வீட் ரெசிபி செய்வது? என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, பத்தே நிமிடத்தில் ரொம்ப ரொம்ப சுவையாக நாவில் கரையக் கூடிய ஒரு ஸ்வீட் ரெசிபி எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம். வீட் ஹல்வா செய்ய தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – ஒரு கப் சர்க்கரை – ஒரு கப் தண்ணீர் – ஒன்றரை கப் நெய் மற்றும் எண்ணெய் – கால் கப் ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன் முந்திரி பருப்பு – தேவையான அளவு. வீட் ஹல்வா செய்முறை விளக்கம்: இந்த வீட் அல்வா செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவு இருந்தால் சட்டென செய்து அசத்தி விடலாம். முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பேனில் ஒரு கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். தண்ணீர் கொதித்து சர்க்கரை கரைய வேண்டும். - Advertisement - ஒரு ஐந்து நிமிடம் சர்க்கரை நன்கு கரைந்து வந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். இப்பொழுது மற்றொரு பேனில் கால் கப் அளவிற்கு பாதி நெய்யும், பாதி எண்ணெயும் சேர்த்து கொள்ளுங்கள். லேசாக காய்ந்ததும் ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவு சேர்த்து நன்கு கிண்டி விடுங்கள். நெய்யுடன் சேர்த்து கோதுமை மாவு பச்சை வாசம் போக நன்கு கலந்து விட வேண்டும். இந்த சமயத்தில் நீங்கள் பொடித்து தூளாக்கி வைத்துள்ள ஏலக்காய் தூள் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். நன்கு கலந்து விட்டு தயார் செய்து வைத்துள்ள சர்க்கரை பாகை ஒரு முறை வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை பாகில் இருக்கும் நுண் துகள்கள் நீங்கும். பின்னர் மூன்று பங்காக கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரை தண்ணீரை ஊற்றி கோதுமை மாவை கிண்டி விட வேண்டும். நீங்கள் பாகை ஊற்றும் பொழுதே கோதுமை மாவு அனைத்தையும் உறிஞ்சிக் கொண்டு அல்வா பதம் போல பேனில் ஒட்டாமல் திரண்டு வரும். - Advertisement - இதையும் படிக்கலாமே:29-10-2024 செவ்வாய் பிரதோஷ வழிபாடு எல்லா பாகையும் சேர்த்து கிண்டியதும், நெய்யில் வறுத்த முந்திரி பருப்புகளை பொடி பொடியாக நறுக்கி தூவி, கை பொறுக்கும் சூடு வந்தவுடன் அப்படியே சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வையுங்கள். அவ்வளவுதாங்க, ரொம்ப ரொம்ப சுலபமாக பத்து நிமிடத்தில் நாவில் கரையக் கூடிய அசத்தலான வீட் ஹல்வா இப்படி ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்க, இனி அடிக்கடி உங்க வீட்டில் குழந்தைகளும், பெரியவர்களும் குழந்தை போல கேட்டு அடம் பிடிக்க துவங்கி விடுவார்கள் பாருங்கள். ஆரோக்கியம் நிறைந்த இந்த வீட் ஹல்வா ரெசிபியை இந்த தீபாவளிக்கு நீங்களும் உங்க வீட்டில் சுலபமாக ட்ரை பண்ணி பாருங்க, அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்க! - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/10-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2024-05-28 08:02:04 निफ्टी भविष्यवाणी: निफ्टी सीमा के भीतर रह सकता है | गिरावट पर खरीदें और ऊपरी स्तर पर बेचें

சகல செல்வங்களையும் பெற மந்திரம் | Sagala sevamum pera manthiram

இன்றைய ராசிபலன் – 06 மே 2024