இந்த வார ராசிபலன் 28/10/2024 முதல் 03/11/2024 வரை - 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!
[ad_1]
- Advertisement -
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் உங்களுடைய வேலையை சரிவர செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு குழப்பமான மனநிலையும் வராது. இதை செய்தால் சரியாக வருமா, அதை செய்தால் சரியாக வருமா என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இதுதான் நமக்கு நன்மையை தரும் என்பது உங்கள் கண்முன்னே தெரியும். வேலை செய்யும் இடத்தில் எல்லோருடைய ஆதரவையும் பெறுவீர்கள். இதுநாள்வரை பிரச்சனையாக இருந்து வந்த விஷயங்கள் எல்லாம் இந்த வாரத்தில் சுமுகமாக முடியும். பண்டிகை நாள் அமோகமாக செல்லும். இந்த வார இறுதியில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள். இந்த வாரத்தில் ஒரு நாள் சிவன் வழிபாடு செய்வது நல்ல பலனை தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் சந்தோஷமாக நேரத்தை கடந்து செல்வீர்கள். சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். சின்ன சின்ன தடைகள் வரும். உறவுகளோடு வாக்குவாதம் வரும். இருந்தாலும் அதை எல்லாம் கொண்டு போய் மனதை குழப்பிக் கொள்ள மாட்டீர்கள். எல்லா பிரச்சனைகளையும் தள்ளி வைத்துவிட்டு, உங்களுடைய வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். இதனால் நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள். பண்டிகை நாட்களில் பட்டாசு வெடிக்கும் போது பிள்ளைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இந்த வாரத்தில் ஒரு நாள் ஹனுமன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.
- Advertisement -
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. குறிப்பாக செலவை குறைக்க வேண்டும். பண்டிகை நாட்கள் என்பதால் சில பேர் வெளியூர் பயணம் செல்வீர்கள். சொந்த ஊருக்கு செல்வீர்கள் அவர்களெல்லாம் பாதுகாப்பாக செல்ல வேண்டும். உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். உறவினர்களோடு சந்தோஷமாக பண்டிகை நாட்கள் நகரும். முன்கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்ள வேண்டும். எந்த இடத்தில் என்ன பேசணும் என்ன பேசக்கூடாது என்பதை முன்கூட்டியே முடிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த வாரத்தில் ஒரு நாள் வீட்டிலேயே குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்வது நல்லது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் படுவேகமாக ஓடிவிடும். உங்களுக்கு இருக்கின்ற வேலையை செய்வதற்கும் நேரமே பத்தாது. 24 மணி நேரம் பத்தாமல் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் நல்லா இருக்குமே, அப்படி என்று தோன்றும். அந்த அளவுக்கு இந்த வாரம் பிசியாக இருக்கப் போகிறீர்கள். உங்களுடைய வேலை தொழில் எல்லாம் மேலோங்கி செல்லும். புதிய முதலீடுகளை செய்தால் தொழிலில் நல்ல லாபத்தை எடுக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். ஏதாவது பிரச்சனை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகவும். இந்த வாரத்தில் ஒரு நாள் பிள்ளையார் கோவிலுக்கு போய் விளக்கு போடுங்க நல்லது நடக்கும்.
- Advertisement -
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நினைத்தது நடக்கக் கூடிய வாரமாக தான் இருக்கும். நிதி நிலைமை சீராகும். வெளியில் இருந்து வர வேண்டிய பணமெல்லாம் உங்கள் கையை வந்து சேரும். பண்டிகையை கொண்டாட தயாராகி விடுவீர்கள். வேலையிலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெருசாக பிரச்சனை இருக்காது. மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். தெரியாத தொழிலில் காலை எடுத்து வைக்க வேண்டாம். கூடுமானவரை இரவு நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இந்த வாரத்தில் ஒரு நாள் அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு வழிபாடு செய்வது நல்ல பலனை கொடுக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதியான வாரமாக இருக்கும். இதுநாள் வரை குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் பிரச்சனைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தேவையற்ற டென்ஷன்கள் நீங்கும். வேலையில் இருந்து வந்த பிரஷர் குறையும். தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்களை எல்லாம் லாபமாக மாற்றுவீர்கள். அதற்கு தேவையான உதவிகளும் கிடைக்கும். உற்சாகம் உங்களை விட்டு நீங்காது. இந்த வாரத்தில் ஒரு நாள் கால பைரவருக்கு விளக்கு போட்டு வழிபாடு செய்வது நல்லது.
- Advertisement -
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். முன்கோபத்தை குறைக்க வேண்டும். அனாவசியமான வார்த்தைகளை பேசக்கூடாது. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். சக ஊழியர்களோடு நட்புறவு பழக வேண்டும். எல்லோரையும் எதிரியாக மாற்றிக் கொள்ள வேண்டாம். அது உங்களுக்கு இறுதியாக பிரச்சனையை தான் கொடுக்கும். நல்லது கெட்டது யார் சொன்னாலும் கேட்டுக்கொள்ளுங்கள். அதை பின்பற்றுவதும் பின்பற்றாமல் போவதும் வேறு விஷயம். பெரியவர்களை தரை குறைவாக, மரியாதை இல்லாமல் பேசக்கூடாது. இந்த வாரம் தேவையற்ற பிரச்சனைகள் வரும் வாரமாகத் தான் இருக்கும். இந்த வாரத்தில் ஏதாவது ஒரு நாள் அனுமன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் குழப்பமில்லாத தெளிவான வாரமாக இருக்கும். எல்லா முடிவுகளையும் டக் டக் என்று எடுப்பீர்கள். அந்த முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கும். அடுத்தவர்களுடைய பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பீர்கள். அடுத்தவர்களுக்கு நிறைய உதவியும் செய்வீர்கள். நிறைய பஞ்சாயத்துகள் செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். குறிப்பாக உயர்ந்த இடத்தில் வேலை செய்பவர்களுக்கு, இந்த வாரம் நிறைய நல்லது நடக்கும். கலைஞர்கள், விவசாயிகள், விளையாட்டு துறையில் இருப்பவர்களுக்கும் இந்த வாரம் சிறப்பானதாக அமையும். அங்காளம்மன் கோவில், வாராஹி இதுபோல உக்கிர தெய்வங்கள் வழிபாடு உங்களுக்கு இந்த வாரம் நன்மையை செய்யும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் சோர்வாகத்தான் காணப்படுவீர்கள். வீட்டில் சின்ன சின்ன சண்டைகள் வரும். மன நிம்மதி கெட்டுப் போகும் அளவுக்கு சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. உடனடியாக பயப்பட வேண்டாம். பிரச்சனைகள் உங்களுக்கு அனுபவத்தை கொடுக்கும். அதை அனுபவமாக மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதையே நினைத்துக் கொண்டு நேரத்தை வீணாக்க வேண்டாம். கடமைகளில் தவறாமல் இருக்க வேண்டும். வேலைகளை சரிவர செய்து விடுங்கள். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மன நிம்மதி பெற தினமும் சிவன் கோவிலுக்கு சென்று தியானம் செய்தாலும் நல்லது தான்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுறுசுறுப்பான வாரமாக இருக்கும். எதிலும் துணிச்சலோடு செயல்படுவீர்கள். எதைக் கண்டும் பயப்பட மாட்டீர்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவீர்கள். நீங்கள் அடுத்தவர்களுக்கு உதாரணமாக திகழ்வீர்கள். மேலதிகாரிகளே உங்களை பார்த்து ஆச்சரியப்படுவார்கள். மாணவர்களுக்கு கைத்தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல முன்னேற்றம் இருக்கும். திறமை வெளிப்படக்கூடிய வாரமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தை முன்னேற்ற தேவையான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக இருக்கும். வார துவக்கத்தில் சில பல பிரச்சனைகள் வருவது போல இருந்தாலும், வார இறுதியில் நீங்கள் நினைத்த விஷயங்களை சாதித்து விடுவீர்கள். வியாபாரத்திலும் தொழிலிலும் பெரிய அளவில் பிரச்சனை இருக்காது. எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். வீட்டில் வேலை செய்யும் பெண்கள், வண்டி ஓட்டி செல்லும் பெண்கள், எல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். ரத்தக்காயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த வாரம் முருகர் வழிபாடு செய்வது உங்களுக்கு அனுகூலமான பலனை கொடுக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கும். உறவுகளுடன் நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் உண்டாகும். நீண்ட நாட்களுக்கு முன்பு செய்த தவறை எண்ணி இன்று வருதப்படுவீர்கள். இனிமேல் அந்த தவறு செய்யக்கூடாது என்றும் முடிவு எடுத்துக் கொள்வீர்கள். அந்த முடிவு உங்களுடைய எதிர்காலத்திற்கு பல நன்மைகளை செய்து தரும். வேலையில் கொஞ்சம் அனுசரணை தேவை. யாரையும் எதிரியாக பார்க்கக்கூடாது. மேலதிகாரிகளோடு தன்மையாக தான் பேச வேண்டும். இருக்கின்ற வேலையை தக்க வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். வீட்டு உணவை சாப்பிடுவது இன்னும் நல்லது. தினமும் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்தால் நல்லது நடக்கும்.
- Advertisement -
[ad_2]
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
https://nithyasubam.in/tamil/jodhidam-prediction/vaara-rasi-palan/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-28-10-2024-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-03-11/
கருத்துகள்
கருத்துரையிடுக