ராஜயோகம் தரும் முருகன் மந்திரம் | rajayogam tharum murugan manthiram in tamil

[ad_1] - Advertisement - திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணை என்று கூறுவார்கள். நம்முடைய இஷ்ட தெய்வமோ, குலதெய்வமோ அவர்களை நம்பி அவர்களிடம் நம்முடைய வாழ்க்கையை நாம் ஒப்படைத்து விட்டோம் என்றால் அவர்களே நமக்கு நல்ல வழியை காட்டுவார்கள் என்று கூறப்படுகிறது. இதில் சரணாகதி என்பதுதான் மிகவும் முக்கியமான ஒன்று. அப்படி சரணாகதி அடைந்த நிலையில் அந்த தெய்வத்திற்குரிய மந்திரங்களை நாம் மனதார உச்சரித்துக் கொண்டே இருக்கும் பட்சத்தில் நமக்கு அந்த தெய்வத்தின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும். அதனால் வாழ்க்கை சிறப்பாக அமையும். அந்த வகையில் ராஜ யோகத்துடன் வாழ்வதற்கு முருகப்பெருமானின் எந்த மந்திரத்தை கூற வேண்டும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். ராஜயோகம் தரும் முருகன் மந்திரம் இந்த கலியுகத்தில் பலராலும் வழிபட விரும்பக்கூடிய ஒரு தெய்வமாக திகழ்பவர் முருகப்பெருமான். இவருக்கு அறுபடை வீடுகள் என்று ஆறு வீடுகளில் இருந்தாலும் அதை தவிர்த்து எங்கெங்கெல்லாம் அவர் குடி கொண்டிருக்கிறாரோ அங்கெல்லாம் பக்தர்களின் கூட்டம் என்பது வந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் அவர்களுடைய உண்மையான பக்திக்கு முருகப்பெருமான் அடிமையாகி அவர்கள் வேண்டிய வரத்தை தருகிறார் என்பதுதான். மேலும் அவரை சரணாகதி அடைந்து வழிபாடு செய்பவர்களுக்கு அவர் எப்பொழுதும் நன்மையை செய்வார் என்று கூறப்படுகிறது. - Advertisement - முருகப் பெருமானை பல வேண்டுதலுக்காக பல விதங்களில் பல விரதங்களை இருந்து வழிபாடு செய்வோம். சஷ்டி விரதம், கிருத்திகை விரதம் என்று வழிபாடு செய்வதைப் போலவே ஒவ்வொரு மாதத்திலும் சில குறிப்பிட்ட நாட்கள் முருகப்பெருமானுக்கு விசேஷகரமான நாட்களாக அமையும். எடுத்துக்காட்டாக தைப்பூசம், வைகாசி விசாகம், கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரம் இப்படி நாம் கூறிக் கொண்டே செல்லலாம். அந்த நாட்களிலும் முருகப் பெருமானை வழிபாடு செய்யலாம்.. அதே சமயம் அனுதினமும் நம் முருகப்பெருமானை வழிபாடு செய்தோம் என்றால் அதன் பலன் என்னும் அதிகமாக இருக்கும். அப்படி முருகப்பெருமானை அனுதினமும் வழிபாடு செய்வதற்கு என்று பல வழிமுறைகள் இருக்கிறது. முருகப்பெருமானை மனதார நினைத்து முருகா நீயே துணை என்று கூறுவதும் ஒரு வித வழிப்பாடுதான். அதேசமயம் காலையிலும் மாலையிலும் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப் பெருமானின் பாடலை பாடி வழிபாடு செய்தாலும் அதற்குரிய பலன் என்பதை கிடைக்கும். அதே போல் தான் அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதியில் இருந்து இந்த ஒரு மந்திரத்தை நாம் தினமும் ஆறுமுகத்திற்காக ஆறு முறை கூறி வந்தோம் என்றால் ஆறுமுகனின் அருளால் நமக்கு ராஜயோகம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. - Advertisement - இந்த மந்திரத்தை வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டுதான் சொல்ல வேண்டும். முருகப்பெருமானுக்கு என்று தனியாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு இந்த மந்திரத்தை கூறுவது என்பது சிறப்பு. மந்திரம் உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே இதையும் படிக்கலாமே:தங்கம் சேர விநாயகர் மந்திரம்இந்த எளிமையான மந்திரத்தை முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து தினமும் ஆறு முறை கூறுபவர்களுக்கு முருகப்பெருமானின் அருளால் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கான சிறந்த வாஸ்து குறிப்புகள்

Vinayagar Kavasam Lyrics in Tamil